Thursday, September 19, 2013

தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை!


தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை! “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே. இது பாடல் மற்றும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில் காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது. பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாய தலத்தில்பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதானரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம். இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே திருமூலர் சொல்கிறார் உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே. வில்வதையோ, துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள். உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள். இது பேர் அன்பு. இதை செய்தால் தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னை தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும்.