Saturday, September 28, 2013

ரமணருக்கு தனிச் சன்னதி & சம்பந்தர் பாதம்


ரமணருக்கு தனிச் சன்னதி & சம்பந்தர் பாதம் ***திருஅண்ணாமலை சென்ற ரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருஅண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. *** சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம்.. *** சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. *** திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். முகவரி : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். இருப்பிடம் : விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது.

No comments:

Post a Comment