Saturday, September 28, 2013

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள்


ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள் 72,000 நாடிகள் நிறைந்த மானுடச் சரீரம் மனித உடலில் முக்கியமான நாடிகள் மொத்தம் 72000 உள்ளன . இவற்றில் 61,000 நாடிகள் இந்த்ர வடிவகை நாடிகள் ! 11,000 நாடிகள் - காலயோக நாடிகள் ஆகும் . அதாவது 11,000 நாடிகளானவை கால்கள் குறிக்கின்ற கால அம்சங்களை நோக்கியும் , 61,000 நாடிகள் காலயோக அம்சங்களைக் குறிக்கும் சிரசை நோக்கியும் அமைந்திருக்கும் . இவற்றுள் இடகலை , பிங்களை , காந்தார நாடி , அத்திய நாடி , சிங்குவா நாடி , புருஷ நாடி , அலம்புட நாடி , சங்கணி நாடி , குரவ நாடி , சின்மய நாடி , சகஸ்ர நாடி என்ற பன்னிரெண்டும் கலியுகத்திற்கு மிக மிக முக்கிமானவையாம் . இந்தப் பன்னிரெண்டிலும் , சின்மய நாடி . சகஸ்ரநாடியும் சற்குருவின் கீழ் வருவோருக்குத் தான் புனலாகும் . இந்த நாடிகள் அனைத்திலும் பஞ்சபூத சக்திகள் முறையாக நிரவி இருக்க வேண்டும் . --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002 =============================================== "பஞ்சபூதங்களையும் வருவித்து , மறைத்துத் தோற்றுவிக்கின்ற தெய்வீக வல்லமை கொண்ட சித்தர்களிடம் சிக்கினால் , சிக்கென பிடித்தால் மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கில் சிங்காரவேல் மூர்த்தியை டக்கென்று எளிதில் அடைந்து விடலாமே " --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மே2002 { குறிப்பு [அடியேன் கருத்து ] : சதுர் கோடி யுகங்களுக்குமான யுகாதி யுக பிரம்ம ஞான விளக்கங்கள் இந்த இரண்டு வரியில் பதிந்துள்ள்ளது குருவருள் பூரித்து .., இறையருள் கனிந்து மலர்ந்திடல் 2002மே மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இந்த வாக்கியங்கள் தொடர்பான மேலும் சில விளக்கங்களை காண்க .. } =============================================== புகைப்படம்: ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள் 72,000 நாடிகள் நிறைந்த மானுடச் சரீரம் மனித உடலில் முக்கியமான நாடிகள் மொத்தம் 72000 உள்ளன . இவற்றில் 61,000 நாடிகள் இந்த்ர வடிவகை நாடிகள் ! 11,000 நாடிகள் - காலயோக நாடிகள் ஆகும் . அதாவது 11,000 நாடிகளானவை கால்கள் குறிக்கின்ற கால அம்சங்களை நோக்கியும் , 61,000 நாடிகள் காலயோக அம்சங்களைக் குறிக்கும் சிரசை நோக்கியும் அமைந்திருக்கும் . இவற்றுள் இடகலை , பிங்களை , காந்தார நாடி , அத்திய நாடி , சிங்குவா நாடி , புருஷ நாடி , அலம்புட நாடி , சங்கணி நாடி , குரவ நாடி , சின்மய நாடி , சகஸ்ர நாடி என்ற பன்னிரெண்டும் கலியுகத்திற்கு மிக மிக முக்கிமானவையாம் . இந்தப் பன்னிரெண்டிலும் , சின்மய நாடி . சகஸ்ரநாடியும் சற்குருவின் கீழ் வருவோருக்குத் தான் புனலாகும் . இந்த நாடிகள் அனைத்திலும் பஞ்சபூத சக்திகள் முறையாக நிரவி இருக்க வேண்டும் . --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002 =============================================== "பஞ்சபூதங்களையும் வருவித்து , மறைத்துத் தோற்றுவிக்கின்ற தெய்வீக வல்லமை கொண்ட சித்தர்களிடம் சிக்கினால் , சிக்கென பிடித்தால் மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கில் சிங்காரவேல் மூர்த்தியை டக்கென்று எளிதில் அடைந்து விடலாமே " --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மே2002 { குறிப்பு [அடியேன் கருத்து ] : சதுர் கோடி யுகங்களுக்குமான யுகாதி யுக பிரம்ம ஞான விளக்கங்கள் இந்த இரண்டு வரியில் பதிந்துள்ள்ளது குருவருள் பூரித்து .., இறையருள் கனிந்து மலர்ந்திடல் 2002மே மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இந்த வாக்கியங்கள் தொடர்பான மேலும் சில விளக்கங்களை காண்க .. } =============================================== 46பகிர்க

ரமணருக்கு தனிச் சன்னதி & சம்பந்தர் பாதம்


ரமணருக்கு தனிச் சன்னதி & சம்பந்தர் பாதம் ***திருஅண்ணாமலை சென்ற ரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருஅண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. *** சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம்.. *** சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. *** திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். முகவரி : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். இருப்பிடம் : விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது.

வானத்தில் பறந்த சித்தர்


ஒரு சிவன் கோயில்… அதன் அருகே பிரும்மாண்டமான ஒரு மைதானம். அந்த மைதானத்தில் ஒரு பழைய தேர். அதன் அருகில் பல சிறுவர்கள் களித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் சக்கரத்தின் மேல் ஏறினான், ஒருவன் அதற்குள் ஒளிந்து கொண்டான். இதையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஒரு சித்த புருஷர். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அவர் ஒரு தாடித்தாத்தா. சித்தர் பேசினார் “குழந்தைகளே இந்தத் தேரையே இப்படித் தடவித் தடவிப் பார்க்கிறீர்களே! இதை விடப் பல மடங்கு பெரிய தேரைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் திருவாரூர் கோயிலின் தேர்” “தாத்தா தாத்தா, நாங்கள் அதைப் பார்க்க வேண்டுமே எங்களை அழைத்துப் போங்கள்” “போடா ராமு, அவர் என்ன ஏரோப்பிளேனா பறந்து போவதற்கு?” “குழந்தைகளே, இந்தத் தாத்தா இப்போது ஏரோப்பிளேன் மாதிரி பறந்து உங்களை அழைத்துப் போகப் போகிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள்” குழந்தைகளும் அவசர அவசரமாக அவர் தோளிலும் முதுகிலும் ஏறிக் கொள்ள சித்தர் பறந்தார், ஒரு சில நிமிடங்களில் திருவாரூர் வந்து விட்டார். குழந்தைகள் பிரமிப்பில் மூழ்கினர். ஆவல் தீர அந்தத் தேரைப் பார்த்துக் களித்து பின் திரும்பவும் அவர் முதுகில் அமர, சித்தர் பறந்து முதலில் இருந்த இடத்திற்கே வந்தார். இதைச் சாமானிய மனிதனால் செய்ய முடியுமா? சந்தேகமில்லாமல் ஒரு சித்தரால்தான் செய்ய முடியும். அந்தச் சித்தர்தான் வில்லியனூரில் இருந்த “ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள்”. ‘ரிஷி மூலம் நதி மூலம்’ கேட்கக் கூடாது என்பார்கள், இவரது பெற்றோர்கள் யார் என்று தெரியாது. இவர் நிச்சயமாக வட நாட்டைச் சேர்ந்தவர்தாம். இவர் சிறு வயதில் தனியாக தன் இஷ்டப்படி திரிந்து வந்தார், பாசம் என்பதே தெரியாமல் தானே வளர்ந்து வந்தார். ஒரு நாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர் தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூர காலாற நடந்து வரும் போது, அங்கு ஒரு முதியவரைச் சந்தித்தார், அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார். “என்ன செய்வது என்று தெரியாமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா, உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரும்ம உபதேசம் செய்கிறேன்” என்று கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார். ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில்தான் அது. இந்த ஆலயத்திற்கு அவர் அடிக்கடி வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார். சில சமயம் அவர் உடலே இதில் தேய்ந்து விடும். அந்த இடம் தான் இன்று தெய்வீக ஸ்தலமாக, புனித ஜீவ பீடம் அமைந்த இடமாக விளங்குகிறது, இவரே ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்”. ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம் புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது. இது ஒரு காலத்தில் வில்வமரக் காடாக இருந்ததாம். அங்கே சுயம்புவாக ஒரு லிங்கம் தோன்றியதாம். அங்கு ஒரு பசு தினமும் வந்து அதன் மேல் பால் சுரந்து வழிபட்டதாம். பின்னர் சோழ மகாராஜா இந்தக் கோயிலைச் சிறப்பாகக் கட்டி வழிபட்டாராம். இந்தச் சித்தர் செய்த அதிசயங்கள் பல. இவர் இடுப்பில் வைக்கோலைக் கட்டிக் கொண்டு, திருக்கோயிலை வலம் வரும் போது சிறுவர்களைக் கூப்பிட்டுத் தன்னை இழுக்கச் சொல்வார். பின் மண்ணை அள்ளி எடுத்து அதை மிட்டாயாக மாற்றி, அதை சிறுவர்களுக்கு வழங்குவார். ஒரு நாள், ஒரு இளைஞனைப் பாம்பு கடித்து விட்டது, மக்கள் அவனைத் தூக்கி இவர் முன் கொண்டு வந்து போட்டார்கள். இவர் கண் மூடித் தியானம் செய்து கடித்த பாம்பை வரவழைத்தார், பின் அதை, தான் கடித்துப் பரப்பிய விஷத்தை உறிஞ்சித் தன்னுடைய அலுமினியத் தட்டில் உமிழச் செய்தார். பாம்பும் அவர் சொன்னபடியே செய்ததை எல்லோரும் வியப்பால் சிலை போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சித்தரோ அந்த விஷத்தைக் குடித்து விட்டார், அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் தொட்ட இடமெல்லாம் வளமுற்றன. இவர் ஆசிகளால் பலர் பயனடைந்தனர். இவர் பிரும்ம நிலை அடைந்து விட்டால் தனக்குத் தானே ஸ்ரீராம் என்று கூறித் தன்னையே அர்ச்சித்துக் கொள்வாராம். ஆகையால் கூட இவரது பெயரும் ஸ்ரீராம் என்று வந்திருக்கலாம். சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி கேட்டுக் கொண்டார். அந்த மண்ணை பிற்பாடு எடுத்தால் மிட்டாயாக மாறும் என்றார், அதே போல் சில சிறுவர்கள் அதைச் செய்து பார்க்கையில், அந்த மண் மிட்டாயாக மாறியது என்கிறார்கள் மக்கள். இதெல்லாம் நடந்து முப்பது ஆண்டுகள் ஓடிய பின். புதுச்சேரியில் பிரஞ்சு ஆதிக்கம் வந்த போது, அந்த இடத்தில் ரயில்வே லைன் அமைத்து, அதற்குப் பின் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக கூலித் தொழிலாளி கடப்பாரையினால் அந்த இடத்தைத் தோண்ட, இரத்தம் பீறிட்டது. தொழிலாளிகள் பயந்து வேலையை நிறுத்தி விட்டனர். பின் மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும் அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம். அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஜீவபீடம் உட்புறம் எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868″ என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது. நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால் நம் கை தானாகவே கூப்பி வணங்க முற்படுகிறது, அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது. இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர். அந்த அற்புத மகானைக் காண அவசியம் அங்கே சென்று வர வேண்டும். கேட்டதை வழங்கும் அந்தச் சித்தரின் ஆசியைப் பெறுங்கள்.

ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்


***ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில் தான் அது. ****இந்த ஆலயத்திற்கு அவர் அடிக்கடி வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார். சில சமயம் அவர் உடலே இதில் தேய்ந்து விடும். அந்த இடம் தான் இன்று தெய்வீக ஸ்தலமாக, புனித ஜீவ பீடம் அமைந்த இடமாக விளங்குகிறது, இவரே ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்”. ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம் புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது. ***ஒரு நாள், ஒரு இளைஞனைப் பாம்பு கடித்து விட்டது, மக்கள் அவனைத் தூக்கி இவர் முன் கொண்டு வந்து போட்டார்கள். இவர் கண் மூடித் தியானம் செய்து கடித்த பாம்பை வரவழைத்தார், பின் அதை, தான் கடித்துப் பரப்பிய விஷத்தை உறிஞ்சித் தன்னுடைய அலுமினியத் தட்டில் உமிழச் செய்தார். பாம்பும் அவர் சொன்னபடியே செய்ததை எல்லோரும் வியப்பால் சிலை போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். ****சித்தரோ அந்த விஷத்தைக் குடித்து விட்டார், அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் தொட்ட இடமெல்லாம் வளமுற்றன. இவர் ஆசிகளால் பலர் பயனடைந்தனர். **** சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி கேட்டுக் கொண்டார். அந்த மண்ணை பிற்பாடு எடுத்தால் மிட்டாயாக மாறும் என்றார், அதே போல் சில சிறுவர்கள் அதைச் செய்து பார்க்கையில், அந்த மண் மிட்டாயாக மாறியது என்கிறார்கள் மக்கள். *** பின் மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும் அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம். அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ***ஜீவபீடம் உட்புறம் எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868″ என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது. நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால் நம் கை தானாகவே கூப்பி வணங்க முற்படுகிறது, அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது. *** இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர். அந்த அற்புத மகானைக் காண அவசியம் அங்கே சென்று வர வேண்டும். கேட்டதை வழங்கும் அந்தச் சித்தரின் ஆசியைப் பெறுங்கள்.

Thursday, September 19, 2013

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள்


ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் 18-ம் நூற்றாண்டின் இறுதியில்,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளையம் என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார். பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில் லக்‌ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு” என்றே சொல்வார்கள். சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால், ஆலயத்தில் மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன் சித்தானந்தன் செய்து வந்தார். அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார். ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால் சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின் கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு-”இறைவா,உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்" என்று சொல்லி வந்து விட்டார். மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு வரவில்லை என்று கேட்க,தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும் “இறைவனுக்கு” தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில் பூட்டப்பட்டிருந்தது. கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை. உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில் விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன. அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு. விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்.எவரொருவர் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன் பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன் ஒளி விட்டு பிரகாசிப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும். எய்தி வழிபடில் எய்தாதன இல்லை எய்தி வழிபடில் இந்திரன் செல்வம் எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே -திருமூலர் எய்தி வழிபட்டார்.ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள் பெற்றார்- கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார். அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின் அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது. ஒரு சமயம்,புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின் அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார். அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும் முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும் புதுவைக்கு வரச் சம்மதித்தார். சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க அன்னம்மாளின் நோயும் விலகிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் நோயும் பறந்தது. தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள் இல்லத்திலேயே அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர். சுவாமிகளும் இசைந்தார். பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர். ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை காண்பித்தார். சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சொல்லி விட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார். ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு, “இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப் போகிறது” என்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார். முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார், சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால் சிவனையே பூஜித்தது போல் அல்லவா? சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு சென்று ஆசி வழங்குவார். ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல், முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார்.சுவாமிகளிடம் முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம் தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்” என்று ஆசிர்வதித்து அனுப்பினார். எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும் பேராற்றல் படைத்தவர் சுவாமிகள். சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின் திருவாக்கு படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார். ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது, குடிகாரன் ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு இழுத்தான். சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினான். சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே --திருமூலர் சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார். பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது, மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன் போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான். சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார். பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை. உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர். பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள் அங்கு சென்று அவனை மன்னித்தார். மயக்கம் தெளிந்து எழுந்த குடிகாரன் தன் தவறை உணர்ந்து சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான். சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர பெருமானின் திருக்கட்டளைக்காக காத்திருந்தார். திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து “ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும் அறியும்படி செய் “ என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய பத்து நாட்களுக்கு முன் நடந்தது. நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும் கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார். அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள். எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும் தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே -திருமந்திரம் ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளாகவே நினைவில் கொண்டு வணங்கினார்கள். கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார். பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள் சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி தோட்டத்தில் -சுவாமிகள் சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக காட்சியளிக்கிறது. ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள் நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள். மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக பாடியுள்ள பாடல் இதோ ; சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில் தீபவொளியுண்டாம்; பெண்ணே முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும் ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே மூன்று வகைப்படும் கால நன்றென்பதை முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப் பார்க்க வொளிசுடராம்; பெண்ணே கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக் காணவொளிர் சுடராம்; பெண்ணே

18 சித்தர்கள்


சித்தர்கள் கோரக்கர்